மேலும் செய்திகள்
பஸ் கண்டக்டரிடம் பிரச்னை மாணவர்கள் சாலை மறியல்
17-Jul-2025
போத்தனூர் ; பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வந்த அரசு பஸ்சில், கரும்புகை வந்ததால் பயணியர் அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடியை உடைத்து கீழே இறங்க முயன்ற ஒருவருக்கு, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. பொள்ளாச்சி டிப்போவை (எண்: 01) சேர்ந்த அரசு மப்சல் பஸ் ஒன்று, நேற்று காலை, 9:00 மணிக்கு பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு, கோவை நோக்கி வந்தது. பொள்ளாச்சி, புரவிபாளையத்தை சேர்ந்த டிரைவர் சிவசுப்ரமணி, 45 பஸ்சை ஓட்டி வந்தார். 9:45 மணியளவில், பிரிமியர் மில்ஸ் பகுதியில் பஸ் கியர் பாக்ஸிலிருந்து கரும்புகை வந்தது. டிரைவர் சிவசுப்ரமணியம் பஸ்சை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, கீழிறங்கி ஓடிவிட்டார். பஸ்சில் தீ பற்றி விட்டதாக நினைத்து பதறிய பயணிகள், கீழே இறங்க முற்பட்டனர். தானியங்கி கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து சிலர், பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். இதில் பொள்ளாச்சி, சூளேஸ்வரம்பட்டியை சேர்ந்த வக்கீல் மோகன்ராஜ், 55 கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவரை அங்கிருந்தோர் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பயணிகள், கண்டக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியே வந்த பஸ்களில், பயணிகளை கண்டக்டர் அனுப்பி வைத்தார். செட்டிபாளையம் போலீசார் விசாரணையில். சம்பவத்தின்போது பஸ்சில், 90 பேர் இருந்ததும், பஸ்சின் கியர் பாக்ஸ் ரப்பர் சூடாகி, புகை வந்ததும், டிரைவர் தானியங்கி கதவை திறக்காமல் ஓடியதும் தெரிந்தது.
17-Jul-2025