மேலும் செய்திகள்
மளிகை கடைக்காரர் கடனால் விபரீத முடிவு
05-Aug-2025
ஆனைமலை; ஆனைமலை அருகே, மளிகை கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனைமலை, ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே, லட்சுமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று, வழக்கம் போல கடையை திறக்கும் போது கடைக்குள் எலியை விழுங்கி கொண்டு இருந்த பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், பாம்பு பிடி வீரர் பாலு ஆகியோர், கடைக்குள் இருந்த ஆறடி நீளம் உள்ள சாரைபாம்பை பிடித்து, ஆழியாறு வனப்பகுதியில் விட்டனர்.
05-Aug-2025