மேலும் செய்திகள்
தோட்டத்தில் காட்டு மாடுகள்
09-Dec-2024
வால்பாறை; வால்பாறை எஸ்டேட் பகுதியில், அதிகாலை நேரத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.வால்பாறையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் இழந்த நிலையில், பகல் நேரத்தில் வெயிலும், காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.இதனிடையே, வால்பாறையில் காலை, மாலை நேரங்களில், எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், தொழிலாளர்கள் கை மற்றும் கால்களில் பாதுகாப்பு கவசம் அணிந்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறியதாவது:வால்பாறையில் கடும் பனிமூட்டத்தின் மத்தியில், வன விலங்குகளும் நடமாடுவதால், தொழிலாளர்கள் காலை நேரத்தில் கவனமாக பணிக்கு செல்ல வேண்டும். காலை, 6:00 மணிக்கு, தேயிலை செடிக்கு மருந்து அடிக்கவோ, தொழிலாளர்களை தேயிலை பறிக்கும் பணியிலோ சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கூடாது.வழக்கமாக பணியில் ஈடுபடுத்தப்படும் நேரத்தில் (காலை, 8:00 மணி) தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். யானைகள் முகாமிட்ட தேயிலை காட்டில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு, கூறினர்.
09-Dec-2024