உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.என்.எஸ். கல்லுாரியில் சூரிய சக்தி திட்டம் துவக்கம்

 எஸ்.என்.எஸ். கல்லுாரியில் சூரிய சக்தி திட்டம் துவக்கம்

கோவை: சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரி, தனது வளாகத்தில் 250 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி திட்டத்தை அமைத்துள்ளது. எஸ்.என்.எஸ்., கேர்ஸ் எரிசக்தி ஆய்வு மையம் மற்றும் கேர்ஸ் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் இணைந்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தேசிய சூரிய ஆற்றல் நிறுவன பொது இயக்குனர் முகம்மது ரிஹான் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் பைபேஷியல் போட்டோவோல்டாயிக் தொழில்நுட்பம் மற்றும் பிரதிபலிப்பு தரை பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரதிபலிப்பு தரை பூச்சு, வழக்கமான அமைப்புகளை விட அதிக சூரிய கதிர்வீச்சை பயன்படுத்த உதவுகிறது. கேர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரகுராம் அர்ஜூனன், எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரி நிர்வாக இயக்குனர் செந்துார் பாண்டியன் மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி