உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கல்லுாரி பட்டமளிப்பு விழா

எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை: டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியின் 17வது பட்டமளிப்பு விழா, எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது. எஸ் என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி பல்கலையின் துணைவேந்தர் பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், ''எந்த சூழ்நிலையிலும் வாழ்வியல் மதிப்புகளைக் கைவிடாமல் இருக்க வேண்டும்,'' என்றார். கல்லுாரி முதல்வர் அனிதா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் 2 ஆயிரத்து 60 இளங்கலை மாணவர்கள், 595 முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் செயலர் நளின்,துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை