வேளாண் துறை சார்பில் மண் பரிசோதனை முகாம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், 16 ஆயிரம் ஹெக்டர் பயிர் சாகுபடி உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் மண் பரிசோதனை மையம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மண், நீர் பரிசோதனை செய்கின்றனர். இந்நிலையில், வேளாண் துறை சார்பில் இன்று, 12ம் தேதி வடசித்தூர் துணை வேளாண் விரிவாக்க மையத்திலும், நாளை 13ம் தேதி அரசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்திலும் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடக்கிறது. இதில், விவசாயிகள் விளை நில மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். மண் மற்றும் நீர் பரிசோதனைக்கு தலா 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். முகாமுக்கு வரும் விவசாயிகள், ஆதார் கார்டு நகல், சிட்டா நகல், மொபைல்எண் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும், என, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.