உள்ளூர் செய்திகள்

சில வரி செய்திகள்...

விதைத்துறையில் மூலக்கூறு

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் தாவர தொழில்நுட்பத்துறை சார்பில், விதைத்துறையில் மூலக்கூறு குறியீடு, மரபணு இனப்பெருக்கம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. பயிர் மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி, தகவமைப்புத் திறனை மேம்படுத்துவதில் மூலக்கூறு இனப்பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. ராசி சீட்ஸ் ஆராய்ச்சியாளர் ஜெகதீஷ் செல்வம், தாவர உயிரி தொழில்நுட்ப துறைத் தலைவர் கோகிலாதேவி, காக்ஸ்பிட் இயக்குநர் செந்தில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

ஹைட்ரஜன் எரிபொருள் தினம்

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை சார்பில், உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்கள் தினம் கொண்டாடப்பட்டது. டீன் ரவிராஜ் தலைமை வகித்தார். ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, எரிபொருள் செல்கலின் பயன்பாடு, ஹைட்ரஜன் எரிவாயு கலன் இயங்கும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. ஹைட்ரஜன் எரிபொருள் செல்களின் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. துறைத்தலைவர் ரமேஷ், பேராசிரியர் பழனிசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !