உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்மாநில ஓபன் கபடி போட்டி;கே.பி.ஆர்., கல்லூரி அசத்தல்

தென்மாநில ஓபன் கபடி போட்டி;கே.பி.ஆர்., கல்லூரி அசத்தல்

கோவை;கேரளா மாநிலத்தில் நடந்த தென்னிந்தியா அளவிலான ஓபன் கபடி போட்டியில் கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி அணி இரண்டாமிடம் பிடித்தது.தென் மாநிலங்கள் அளவில் உள்ள சிறந்த அணிகளுக்கான ஓபன் பிரிவு கபடி போட்டி கேரளாவில் நடந்தது. இதில், எட்டு அணிகள் பங்கேற்றன.இப்போட்டியில் பங்கேற்ற கோவை கே.பி.ஆர்., கல்லுாரி அணி காலிறுதிப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அணியை 51 - 37 என்ற புள்ளிக்கணக்கிலும், அரையிறுதியில் ஜேப்பியார் பல்கலை அணியை 35 - 32 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதிப்போட்டியில், ஜே.கே.அகாடமி அணியுடன் மோதிய கே.பி.ஆர்., மாணவர்கள் 22 - 10 என்ற புள்ளிக்கணக்கில், இரண்டாம் இடத்தை பிடித்தனர். மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களை கே.பி.ஆர்., கல்லுாரி நிர்வாகத்தினர், முதல்வர், உடற்கல்வித்துறையினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை