உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னக ரயில்வே பொதுமேலாளர் சிங் ஆய்வு

தென்னக ரயில்வே பொதுமேலாளர் சிங் ஆய்வு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங் வந்து, ஆய்வு செய்தார். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன், 150 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, தினமும் சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும், ஊட்டிக்கு மலை ரயிலும், கோவைக்கு பாசஞ்சர் ரயிலும் இயக்கப்படுகின்றன.இதன் வாயிலாக வருவாய் அதிகரித்ததோடு, பயணிகளின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பயணிகளின் வசதிக்காக, ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த, மத்திய அரசு, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக சிமெண்ட் சாலைகள், பூங்காக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், பிளாட்பாரத்தில் பயணிகள் நிழல் கூடம், பயணிகள் எளிதில் பிளாட்பாரதிற்கு செல்ல, இரண்டு எஸ்கலேட்டர்களும், இரண்டு லிப்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது செயல்பாட்டில் உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை, தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங் பார்வையிட, நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அவரை ரயில்வே அதிகாரிகள் வரவேற்றனர். வளர்ச்சி பணிகளை கேட்ட பின்பு, அவர் ஊட்டி சென்றார். வருகிற, 19ம் தேதி மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங் ஆய்வு செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை