மேலும் செய்திகள்
20 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
16-Mar-2025
மருந்துக்கடைகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்
29-Mar-2025
கோவை; கோவை மாவட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் காணாமல் போன 304 மொபைல் போன்களை, எஸ்.பி., கார்த்திகேயன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.கோவை மாவட்ட பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களில் காணாமல் போன, ரூ. 54.26 லட்சம் மதிப்பிலான, 304 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., கார்த்திகேயன் போன்களை ஒப்படைத்தார்.அப்போது அவர் கூறுகையில், ''மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொலைந்து அல்லது திருட்டு போன மொபைல் போன்கள், போலீசாரின் சிறப்பான செயல்பட்டால் மீட்கப்படுகிறது. மாதந்தோறும் 80 முதல் 100 போன்கள் மீட்கப்பட்டு வருகின்றன.கடந்த 3 மாதங்களில், 304 போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், வரலாற்று பதிவேட்டில் உள்ள நபர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.வெளியூர்களில் இருந்து நம் மாவட்டத்திற்குள் வந்துள்ள நபர்களையும் கண்காணித்து வருகிறோம். இது தவிர, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அவர்களையும் கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.
16-Mar-2025
29-Mar-2025