எஸ்.பி.சி.ஏ., புதிய அலுவலகம் திறப்பு
கோவை: கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (எஸ்.பி.சி.ஏ.,) புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை, தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில். கலெக்டர் பவன்குமார் திறந்துவைத்தார். இச்சங்கம் சார்பில், பிராணிகள் வதை புகார்களை விசாரித்தல், மீட்டு மறுவாழ்வு அளித்தல் பராமரித்தல், விலங்கு நலன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அலுவலக திறப்பு விழாவின் முக்கிய பகுதியாக, ஆர்.ஐ.டி., 3206 ரோட்டரி கிளப் சார்பில் ரேபீஸ் தடுப்பூசி இயக்கமும் துவக்கிவைக்கப்பட்டது. இதன் வாயிலாக, 5000 நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். திறப்பு விழா நிகழ்வில், சங்க துணைத்தலைவர் அபர்ணா சுங்கு, செயலர் மோகன்ராஜ், திட்ட அலுவலர் மனோஜ் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.