உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடந்தது.கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சியில், தொல்குடி திட்டத்தின் கீழ், பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் இரு நாட்கள் நடந்தது.முகாமில், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சத்தியவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய செயலாளர் துறை மற்றும் ஒன்றிய அலுவலர்கள், மக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், 115 மனுக்கள் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !