மேலும் செய்திகள்
கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவக்கம்
04-Dec-2024
பூபாளம் இசையில் களைகட்டும் கிறிஸ்துமஸ்
08-Dec-2024
கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக, திருச்சி ரோடு கிறிஸ்து அரசர் ஆலயத்தில், நேற்று சிறப்பு மெழுகுவர்த்தி ஆராதனை நடந்தது. வரும் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் ஸ்டார் கட்டுவது, அலங்கார விளக்குகள் வைப்பது, கிறிஸ்துமஸ் கேரல்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் வகையில், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ., கிறிஸ்து அரசர் ஆலயத்தில், ஆலய தலைவர் ராஜேந்திர குமார் தலைமையில் நேற்று, 1000 மெழுகுவர்த்திகளின் ஒளியில், சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. ஆராதனையில், பாதிரியார்கள் சற்குணம், சுரேஷ் குமார், ரக்ஸ், மார்டின் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆலய பொருளாளர் காட்வின் கோயில், செயலாளர் பாக்கியசெல்வன், உறுப்பினர்கள் ஆடம் அப்பாதுரை, பிரசாந்த் ராஜ்குமார், ஸ்டீபன், ஜெபகிங், ஜேக்கப், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
04-Dec-2024
08-Dec-2024