தமிழ் கற்க சிறப்பு மையம்
கோவை:கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில், வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிவது அதிகரித்து வருகிறது. அவர்களின் குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பேரூர், தொண்டாமுத்துார் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிகளில், வெளிமாநில குழந்தைகள் அதிகம் படிக்கின்றனர். ஒரு வட்டாரத்துக்கு சராசரியாக, 20க்கும் மேற்பட்டோர் கல்வி கற்கின்றனர். இக்குழந்தைகளுக்கு எளிய முறையில் பாடங்களை கற்பிக்கவும், தமிழ் மொழியை கற்றுக்கொடுக்கவும் இரண்டு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி, பள்ளிக்கு வருவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்' என்றனர்.