மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
14-Aug-2025
கோவை : சுகுணா கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரமா? சாபமா?' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. எழுத்தாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் உமாமகேஸ்வரி, பட்டிமன்ற நடுவராக நிகழ்வைநடத்தினார். மாணவர்கள் சமூக ஊடகங்களின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இது, சமூக ஊடக பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு புதிய பார்வையை அளித்தது. கல்லுாரி தலைவர் சுகுணா, தாளாளர் லட்சுமி நாராயணசாமி, முதல்வர் ராஜ்குமார், இயக்குனர் சேகர், துறை தலைவர்கள், தமிழ்த்துறை பேராசிரியர்கள் சாந்தாமணி, வேணுகோபால், தாரணி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
14-Aug-2025