மேலும் செய்திகள்
மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா
26-Dec-2025
போத்தனூர், ஜன. 2-- புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று கோவை தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் ஆராதனைகள் நடந்தன. போத்தனூர் புனித ஜோசப் சர்ச்சில், பங்குத்தந்தை ஜோஸப் சுதாகர், புனித கார்மெல் அன்னை சர்ச்சில் பங்கு தந்தை ரசல்ராஜ், தூய க்ளோட்டில்டா சர்ச்சில் ஜான்சன், தமிழ் சுவிசேஷ லுத்தரன் சர்ச்சில் பங்குதந்தை ஆனந்த் முத்துகுமார் ஆகியோர் ஆராதனை நடத்தினர். வெள்ளலூர் சாலையிலுள்ள சி.எஸ்.ஐ. யூனியன் சர்ச்சில் ஆயர் கெர்சோம் ஜேக்கப், புதிய ஆண்டுக்கான செயல்பாடுகளை எடுத்துரைத்தார். ஞானஸ்தானம், திருவிருந்து வழங்கப்பட்டது. வானொலி நகர் இயேசு ரட்சகர் சர்ச்சில், ஆயர் பாபு ஜோஸ்வா, செயின்ட் மாற்க் சர்ச்சில் ஆயர் ஜான் தினகரன், மெதடிஸ்ட் சர்ச்சில் ஆயர் ஆரோக்கியநாதன், சுந்தராபுரம் கிறிஸ்துநாதர் சர்ச்சில் ஆயர் ஜெபுலின், மதுக்கரை கிறிஸ்துநாதர் சர்ச்சில் ஆயர் வசந்த் நற்செய்தி வழங்கினர்.
26-Dec-2025