மேலும் செய்திகள்
ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்
06-Dec-2024
கோவை; பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் தமிழ்த்துறை, தொல்காப்பியர் தமிழாய்வு மையம் மற்றும் திருமதி கிருஷ்ணவேணி கவிதாசன் அறக்கட்டளை சார்பில், சிறப்புச் சொற்பொழிவு நடந்தது.திருமதி கிருஷ்ணவேணி கவிதாசன் அறக்கட்டளையின், நிறுவனர் கவிதாசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் விமலா, 'மகளிர் திறன் மேம்பாடு முன்னேற்றப்பாதை' எனும் தலைப்பில் உரையாற்றினார். பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்வில், கல்லுாரி முதல்வர் ஹாரத்தி, தமிழ்த்துறைத் தலைவர் சுகன்யா, தொல்காப்பியர் தமிழாய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா மற்றும் பலர் பங்கேற்றனர். -
06-Dec-2024