உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்

சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - போத்தனுார் சிறப்பு ரயில் --- 06021, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு, 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:15 மணிக்கு போத்தனுார் வந்தடையும். சிறப்பு ரயில், வரும், 29 மற்றும் நவ., 2ம் தேதி இயக்கப்படுகிறது.மறுமார்க்கத்தில், கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் - 06022, கோவையில் இருந்து நள்ளிரவு, 12:15 மணிக்கு புறப்பட்டு, காலை, 9:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இச்சிறப்பு ரயில், வரும் 31 மற்றும் நவ., 4ம் தேதி இயக்கப்படுகிறது.சிறப்பு ரயிலில், 'ஏசி' இரண்டடுக்கு 2, மூன்றடுக்கு 6, படுக்கை வசதி 8, பொது இரண்டாம் வகுப்பு 1 என, 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சேலம், ஈரோடு, திருப்பூர், வழியாக செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை