மேலும் செய்திகள்
திருச்செந்துாருக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்
27-Jan-2025
கிணத்துக்கடவு: கோவை -- திண்டுக்கல் இடையே தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி கோவிலுக்கு செல்ல சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் சார்பில், நேற்று, 5ம் தேதி முதல், 14ம் தேதி வரை, கோவை --- திண்டுக்கல் இடையே தைப்பூச சிறப்பு ரயில் (06106) சேவை துவங்கப்பட்டுள்ளது.கோவையில், காலை, 9:35 மணிக்கு கிளம்பி, கிணத்துக்கடவு (10:14), பொள்ளாச்சி (11:07), பழநி (12:10) மார்க்கமாக, திண்டுக்களுக்கு மதியம் 1:10 மணிக்கு சென்றடைகிறது. இதனால் ரயில் பயணியர் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த சிறப்பு ரயிலை, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வரவேற்றனர்.
27-Jan-2025