உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் குழுவுக்கு சிறப்பு பயிற்சி

மகளிர் குழுவுக்கு சிறப்பு பயிற்சி

தொண்டாமுத்துார்;தொண்டாமுத்துார் வட்டார வேளாண்மை துறை, 'அட்மா' திட்டத்தின் கீழ், மகளிர் குழுவுக்கான சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வகுப்பு, விராலியூரில் நடந்தது.தொண்டாமுத்துார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) புனிதா முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன், சிறுதானியங்களின் முக்கியத்துவம், சாகுபடி தொழில் நுட்பங்கள், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். வேளாண்மை அலுவலர்கள் மற்றும் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை