உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘மெல்ல கற்கும் மாணவர்களுக்கு வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள்’

‘மெல்ல கற்கும் மாணவர்களுக்கு வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள்’

கோவை: வரும் பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற 180 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை சேர்ந்த 100 ஆசிரியர்களும் பங்கேற்றனர். 2025ம் ஆண்டு பொதுத்தேர்வுடன் ஒப்பிடுகையில், 2026ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதையடுத்து, வரும் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கலெக்டர் பவன்குமார் பேசுகையில், ‘‘பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தொடர்ந்து மாதிரி தேர்வுகள் நடத்துங்கள். பள்ளிக்கு வராத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்து, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்,’’ என அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை