மாணவர்களுக்கான பேச்சு போட்டி
சூலுார்; ஆயுர்வேத தினத்தை ஒட்டி, மாணவர்களுக்கு இடையிலான போட்டிகள் நடத்தப்பட்டன.சூலுார் ஆயுர்வேத கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், ஆயுர்வேத மருத்துவமனை, கோயமுத்தூர் மற்றும் உலக ஆயுர்வேத காங்கிரஸ் சார்பில், ஆயுர்வேத தினம் கடைபிடிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் சந்திர மவுலீஸ்வரன், டாக்டர் ஜெய்ஹர் சீனிவாசன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். ஆயுர்வேதத்தின் பயன்கள் குறித்து விருந்தினர்கள் பேசினர். ஆயுர்வேதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு இடையில், பேச்சு, கோலப்போட்டிகள் நடந்தன. குறும்பட போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.