மேலும் செய்திகள்
'ஏற்றுமதியாளர்களுக்கு அரசு பக்கபலமாக இருக்கும்'
04-Sep-2025
கோவை,; வேளாண் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான இரண்டு நாள் பயிற்சி, வேளாண் பல்கலையில் வழங்கப்படுகிறது. வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், அக்., 8, 9ல் வேளாண் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது. மிளகாய், மஞ்சள், சீரகம் உட்பட வேளாண் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி, அதற்கான வாய்ப்புகள், ஏற்றுமதி சார்ந்து அரசின் திட்டங்கள், இந்த நறுமணப் பொருட்களை விளைவிப்பவராக இருப்பின், சிறந்த வேளாண் சாகுபடி முறைகள், எந்தெந்த நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்புகள், ஏற்றுமதி, இறக்குமதிக்கான குறியீடு பெறுதல் என ஒரு ஏற்றுமதி தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து தகவல்களும், இப்பயிற்சியில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரும் பங்கு பெறலாம். பயிற்சி கட்டணம் வரிகள் உட்பட ரூ.3,540. பதிவு மற்றும் விவரங்களுக்கு, 82206 61228 என்ற எண்ணில் அழைக்கலாம்.
04-Sep-2025