உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செண்பகம் பள்ளியில் விளையாட்டு தின விழா

செண்பகம் பள்ளியில் விளையாட்டு தின விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிக் பள்ளியில், விளையாட்டு தின விழா நடந்தது. பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டு தின விழா நடந்தது.தாளாளர், அருட்தந்தையர்கள், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழாவின் துவக்கமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பள்ளியின் விளையாட்டு தலைவர், விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தார். மாநில, தேசிய அளவில் பளுதுாக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, 82 வயதான கிட்டம்மாள் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை