அவதார் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
கோவை: போத்தனுார், செட்டிபாளையம் பகுதியில் உள்ள அவதார் பப்ளிக் பள்ளியில் 2025--26ம் கல்வியாண்டிற்கான விளையாட்டு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். எப்.ஐ.பி.ஏ., கமிஷனர் தனபால், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். விழாவில் யோகா, ஜூம்பா, கராத்தே, பிரமிட் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிக்காட்டினர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, புளூ அணி வென்றது. பள்ளியின் செயலாளர் அருள் பிரகாசம், முதல்வர் ரெம்யா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.