உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீராமர் கோவில் திருவிழா திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீராமர் கோவில் திருவிழா திருக்கல்யாணம் கோலாகலம்

வால்பாறை : அண்ணாநகர் ஸ்ரீராமர் கோவில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீராமர் கோவிலின், 47ம் ஆண்டு திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நாள் தோறும், காலை, மாலை சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றன.விழாவில் நேற்று முன் தினம் இரவு, 7:45 மணிக்கு ஸ்ரீகோதண்டராமசாமிக்கும், சீதா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நேற்று காலை, 9:30 மணிக்கு அலங்கார தேரில் சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார், காலை, 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவை தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், டாக்டர் முனுசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் கணேசன், கவுன்சிலர்கள் காமாட்சி, மகுடீஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம், தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் சிவரஞ்சன், செயலாளர் நாகரத்தினம் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை