உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி ஆண்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி ஆண்டு விழா

கோவை; கோவை வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்து நிகழ்வை துவக்கி வைத்தார்.இதில், பங்கேற்ற ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவளமேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் பேசுகையில், ''சிறப்பான வாழ்க்கைக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு அவசியம். வாய்ப்புகளுக்கு காத்திருக்காமல், உருவாக்குபவர்களே வெற்றியாளராக திகழமுடியும். தகுதியுள்ளவர்களிடம் வாய்ப்புகள் தேடி வரும்; அதை பயன்படுத்த தயாராக இருங்கள், '' என்றார்.பரிசளிப்பு நிகழ்வில், 2024-25ம் ஆண்டில் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் கட்டடவியல் துறை மாணவன் முகந்த் பிரணவ் தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்வில், முதல்வர் கோபாலகிருஷ்ணன், கட்டடவியல் துறைத்தலைவர் நிவேதிதா, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி