உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா 

புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா 

கோவை;ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்தின், 61வது ஆண்டு தேர்த்திருவிழா, வெகு விமரிசையாக நடை பெற்றது.கோவை, தடாகம் ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின், 61வது ஆண்டு தேர்த்திருவிழா, ஜன.,28ல் அருட்பணி அருண் ஞானப்பிரகாசம் தலைமையில், திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.பிப்.2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களும், தினமும் மாலையில் திருவிழா சிறப்பு நவநாள் வழிபாடுகள் நடந்தன. அருட்பணியாளர்கள் ஆன்ட்ரூ, ஜானி சகாயராஜ், சிஜு ஆகியோர் தலைமையில் திருப்பலி, மறையுரை, நவநாள் வழிபாடு மற்றும் திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில், பல்வேறு பங்குகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.திருவிழா நாளான கடந்த ஞாயிறன்று காலையில், அருட்பணி ஜெரோம் தலைமையில், கூட்டுப்பாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அன்று மாலையில், அருட்பணியாளர்கள் ராயப்பன், ஆன்ட்ரூ, விக்டர் பால்ராஜ், ஹென்றி ஆன்டனி ஆகியோர் தலைமையில், தேர்த்திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.திருப்பலியைத் தொடர்ந்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அருளானந்தரின் சுரூபம் வைக்கப்பட்டு, ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதிகளில் பவனியாகக் கொண்டு வரப்பட்டது. தேர்பவனியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இறுதியாக, திவ்ய நற்கருணை ஆசிருடன் விழா நிறைவுபெற்றது.விழா ஏற்பாடுகளை, புனித அருளானந்தர் ஆலய பங்குத்தந்தை ததேயுஸ் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை கிளாட்வின், பங்குக்குழு, அன்பியங்கள் மற்றும் பல்வேறு சபைகளின் பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை