உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கோவை; கோவை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், இரண்டாம் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் உள்ள மண்டபத்தில் நேற்று முகாம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். மாநகராட்சி உதவி கமிஷனர் முத்துசாமி, தெற்கு தாசில்தார் முகமது சையூப் பங்கேற்றனர்.