உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்க்கும் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்க்கும் முகாம்

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் மரகதம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஆனந்தன் வரவேற்றார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை தாசில்தார் சசிகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை உட்பட, 13 துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ