உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கலைத்திருவிழா போட்டி; அவினாசிலிங்கம் மாணவியர் தகுதி

மாநில கலைத்திருவிழா போட்டி; அவினாசிலிங்கம் மாணவியர் தகுதி

கோவை; மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்ற அவினாசிலிங்கம் பள்ளி மாணவியரில், 37 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட கலை திறன்களை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.பள்ளி, ஒன்றியம் அளவில் கலைத்திருவிழா போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட அளவிலான போட்டிகள், சிங்காநல்லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் தெருக்கூத்து, வீதி நாடகம், மணல் சிற்பம், நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற நடனம், வில்லுப்பாட்டு, பரதம், தனிநபர் நடிப்பு என, 13 வகையான போட்டிகளில், முதலிடம் பிடித்துள்ளனர்.இதில், 37 மாணவியர் மாநில அளவிலானபோட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும், இரண்டாம் இடத்தை இருவரும், மூன்றாம் இடத்தை நான்கு பேரும் பெற்றுள்ளனர்.இவர்கள், இம்மாதம் ஈரோட்டில் நடக்கும் மாநிளவிலான போட்டிகளில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சாதனை மாணவியரையும், ஆசிரியர்களையும் பள்ளி செயலாளர் கவுரி, தலைமையாசிரியர் நளினி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ