மேலும் செய்திகள்
கால்பந்து போட்டி : வியக்க வைத்த அணி வீரர்கள்
06-Nov-2025
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, கோவைப்புதுார் ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், மாநில அளவிலான ப்ளோர் பால் போட்டி நடந்தது. சிறப்பு விருந்தினர், ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவகுமார், கவுரவ விருந்தினர்கள் ஆஷ்ரம் பள்ளி நிர்வாகி கவுரி உதயேந்திரன், முன்னாள் மாணவர் ஹசிபா காசம்வாலா, பளுதுாக்கும் வீராங்கனை நித்யா ஆகியோர், போட்டிகளை துவக்கி வைத்தனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் டேவிட் தனராஜ் தலைமை வகித்தார். தமிழகத்தின் 15 மாவட்டங்களில், 36 அணிகளை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 12 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், திருவாரூர், காஞ்சிபுரம், மாணவியர் பிரிவில், திருவாரூர், கோவை அணிகள், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் காஞ்சிபுரம், திருவாரூர், மாணவியர் பிரிவில், திருவாரூர், தர்மபுரி அணிகள் முதல் இரு இடங்களை பிடித்தன. பொது ஆண்கள் பிரிவில், கே.பி.எம்., அணி, திருவாரூர், பெண்கள் பிரிவில், திருவாரூர், கே.பி.எம்., அணிகள் முதல் இரு இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்லுாரியின் உதவி பேராசிரியர் நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Nov-2025