மாநில ஹேண்ட்பால் போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
பெ.நா.பாளையம்: மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளில் விளையாட, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை வருவாய் மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டிகள், பள்ளிக்கல் வி துறை சார்பில் கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் நடந்தன. 18 அணிகள் பங்கேற்றன. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் அணி, மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்வு பெற்றது. 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் அணி தேர்வு பெற்றது. மாநில அளவிலான, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் போட்டி ஜன.,மாதம் ராணிப்பேட்டையிலும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் போட்டி நவ., மாதம் திருச்சியிலும் நடக்கிறது. மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் தனக்குமார், சுதா மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாநில போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் பெரியநாயக்கன்பாளையம் காவலர் சிறுவர், சிறுமியர் மன்றத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.