மாநில அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டி; 29 பதக்கங்களை குவித்த வீரர், வீராங்கனைகள்
கோவை : முதல்வர் கோப்பை டிராக் சைக்கிளிங் போட்டியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த, 29 வீரர், வீராங்கனைகள் பதக்கங்கள் குவித்து, பெருமை சேர்த்துள்ளனர்.'முதல்வர் கோப்பை' மாநில அளவிலான 'டிராக் சைக்கிளிங்' போட்டி, சென்னையில் இரு நாட்கள் நடந்தது. இதில், 14, 16, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த, 29 பேர் பதக்கங்கள் குவித்து பெருமை சேர்த்துள்ளனர்.அதன்படி, தனி நபர் 'டைம் டிரையல்' போட்டியில் கல்லுாரி மாணவர் சஞ்சய் சரவணன் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் புருசோத்தமன் வெண்கலம், பெண்கள் பிரிவில் பூஜா ஸ்வேதா தங்கம், கார்த்தியாயினி வெள்ளி பதக்கமும் வென்றனர்.தவிர, 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பிரணேஷ் தங்கமும், ரமணி வெள்ளி, ஆதில் வெண்கல பதக்கமும், பெண்கள் பிரிவில், தபிதா வெள்ளி, ஹாசினி வெண்கலம், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நிரஞ்சன் தங்கமும், நரேன் ஆதர்ஷ் வெண்கலம், பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி வெள்ளி, நவீனா வெண்கலமும் வென்றனர்.தனிநபர் 'பெர்ஸ்யுட்' பிரிவில், கல்லுாரி மாணவர் மைக்கல் அந்தோணி வெண்கலம், 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தன்யதா தங்கம், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பிரணேஷ் தங்கம், நந்தா கிஷோர் வெள்ளி பதக்கத்தை தட்டினர்.பெண்கள் பிரிவில் தபிதா தங்கம், ஹாசினி வெள்ளி, சாதனா ஸ்ரீ வெண்கலம், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அபிநவ் வெண்கலம், பெண்கள் பிரிவில் ஸ்மிர்தி வெள்ளி, நவீனா வெண்கலம் வென்றனர். 'ஸ்கிரேட்ச் ரேஸ்' பிரிவில், கல்லுாரி மாணவர் ஹர்சித் வெண்கலம் வென்றார்.தவிர, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பெபியன் ராயிஸ் வெள்ளி, பெண்கள் பிரிவில் தன்யதா தங்கம், கார்த்தியாயினி வெண்கலம், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ரமணி தங்கம், ஆதில் வெண்கலமும் வென்றனர். வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.