மேலும் செய்திகள்
ஆவடியில் 6 இன்ஸ்., இடமாற்றம்
05-Dec-2025
கோவை: கோவை மாநகரில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்தும், எஸ்.ஐ.,ஆக இருந்து பதவி உயர்வு பெற்றவர்களை, இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கவும் ஐ.ஜி., செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, பதவி உயர்வு பெற்ற விவேக்குக்கு, திருப்பூர், குண்டடம் ஸ்டேஷன் ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி அருவங்காடு --செல்லமணி, கோட்டூர் - ஜெகதீசன், நெகமம் -- நந்தகுமார், குன்னூர் ஸ்டேஷனுக்கு சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 22 இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இடமாற்றம் மற்றும் பதவி உயர்வின் அடிப்படையில் 27 இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
05-Dec-2025