உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெருநாய்கள் தொல்லை: அச்சத்தில் மக்கள்

தெருநாய்கள் தொல்லை: அச்சத்தில் மக்கள்

வால்பாறை:வால்பாறை நகரில், தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் கூட நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.ரோட்டில் நடமாடும் நாய்கள், சில நேரங்களில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டுகின்றன.அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால், மக்கள் நாள் தோறும் நாய்களிடம் சிக்கி அவதிப்படுகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகரில் கக்கன்காலனி, அண்ணாநகர், சிறுவர்பூங்கா, காமராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் இறைச்சிக்கழிவு மற்றும் உணவுகளை திறந்தவெளியில் வீசுவதால், நாய்கள் அதை சாப்பிட போட்டி போட்டிக்கொண்டு சண்டையிடுகின்றன.இதனால், மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை