உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரியில் மாணவர் மன்ற விழா

அரசு கல்லுாரியில் மாணவர் மன்ற விழா

தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், வணிகவியல் பி.ஏ., துறையின் மாணவர் மன்ற நிறைவு விழா நடந்தது.கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். பயிற்சி தணிக்கையாளர் மணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''வணிகவியல் துறையில் சிறந்து விளங்கினால், நல்ல நிலைக்கு வர முடியும். முயற்சி என்ற சொல்லுக்குள் வெற்றி என்ற வார்த்தை அடங்கியுள்ளது. கல்விதான் கண்ணுக்கு தெரியாத ஒரு சொத்து. கண்ணுக்குத் தெரியாத ஒரு சொத்தை ஒழுக்கத்துடன் சேர்த்து வழி நடத்தி செல்வதன் மூலம், உலகை வெல்ல முடியும்,'' என்றார்.கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !