உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைக் மோதியதில் மாணவன் காயம்

பைக் மோதியதில் மாணவன் காயம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, பள்ளிக்கு செல்ல ரோட்டை கடந்த மாணவன் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.கிணத்துக்கடவு அருகே உள்ள, சொக்கனூரை சேர்ந்தவர் சம்பத்குமார், 44; கார்பென்டர். இவரது மகன் யோகேஷ், 14, கிணத்துக்கடவில், கோவை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.இவர், நேற்று முன்தினம் காலையில் அரசு பஸ்சில் சென்று, பள்ளிக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கியுள்ளார். பள்ளிக்கு செல்ல ரோட்டை கடந்த போது, பொள்ளாச்சி நோக்கி, காரச்சேரியை சேர்ந்த பிரானேஷ், 19, என்பவர் ஓட்டி வந்த பைக், மோதி விபத்து ஏற்பட்டது.இதில், படுகாயம் அடைந்த யோகேஷ், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ