உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேம்போர்டு சர்வதேச பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா

கேம்போர்டு சர்வதேச பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா

கோவை; கேம்போர்டு சர்வதேச பள்ளியில், 16வது மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை சூலுார் விங் கமாண்டர் பற்குணன் பங்கேற்றார்.பள்ளி மாணவர் தலைவராக துரோணா செந்தில், மாணவியர் தலைவியாக சாச்சி கோல்ச்சாவும் மற்றும் பல்வேறு அணித்தலைவர்களும், பதவியேற்றுக் கொண்டனர்.விங் கமாண்டர் பற்குணன் பேசுகையில், ''துடிப்பான பள்ளி கால சூழலை பயன்படுத்தி, பல்வேறு திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், '' என்றார்.அனைவரையும் கவரும் வகையில், மாணவர்கள் கலைநிகழ்வுகளை அரங்கேற்றினர். பள்ளித்தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் டாக்டர் பூனம் சயால் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை