உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்

 மாணவி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்

கோவை: கோவையில் கடந்த நவ. 2ம் தேதி கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சதீஸ், 30, கார்த்திக், 21, குணா, 20 ஆகிய மூவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். மூவரையும் கஸ்டடி எடுத்த போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்களுக்கு சூலுார் முத்து கவுண்டர்புதூரை சேர்ந்த தேவராஜ், 55 கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுதவிர, இவர்கள் மூவர் மீதும், பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், கொள்ளை, திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிந்தது. மூவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. கோவை மாநகர போலீசார் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்த உத்தரவு மூவரிடமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை