உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரியில் மாணவர் சங்கம் துவக்கம்

கல்லுாரியில் மாணவர் சங்கம் துவக்கம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்லுாரியில், மாணவர் சங்கம் துவக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், இயற்பியல் துறை மற்றும் நிறுவனத்தின் புத்தாக்க குழு சார்பில், இயற்பியல் துறை மாணவர் சங்க துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத்தவைர் மஞ்சளவள்ளி வரவேற்றார். கோவை மண்டல அறிவியல் மைய வழிகாட்டி ஆசிரியர் லெனின் பாரதி, இயற்பியல் துறையின் முக்கியத்துவம், அறிவியலில் இயற்பியலின் பங்களிப்பு குறித்து விளக்கினார். தொடர்ந்து, வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்தியாவின் அறிவியல் மேதைகள் குறித்தும், அவர்களது கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கினார். பின்னர் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். மாணவர்கள் பல்வேறு தகவல்களை கேட்டு அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை முதுகலை மாணவர் நிபுன் விக்னேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி