மேலும் செய்திகள்
வாகன விபத்தில் சிறுவன் காயம்
18-Dec-2024
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அக் ஷயா பொறியியல் கல்லூரி மாணவன் உத்திரப்பிரதேசத்தில் நடந்த பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்றார்.இந்திய அளவிலான, 3வது இ.எஸ்.எப்.ஐ., நேஷனல் பெடரேஷன் - 2024 பேட்மிட்டன் போட்டி கடந்த வாரம் (24 முதல் 26 வரை) உத்திரப்பிரதேசம் மதுராவில் நடந்தது.இப்போட்டியில், கிணத்துக்கடவு பகவதிபாளையத்தில் உள்ள அக் ஷயா பொறியியல் கல்லூரியில், பி.இ., மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படிக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த நந்தகுமார் என்ற மாணவர் கல்லூரி சார்பில், 19 வயதிற்கு உற்பட்டோருக்கான ஒற்றையர் போட்டியில் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்று கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார்.மாணவரை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
18-Dec-2024