உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்

வேளாண் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிணத்துக்கடவு அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில், மாணவர்கள் கிராமப் புறங்களில் ஒவ்வொரு குழுவாக பிரிந்து, இரண்டு மாத காலம் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொக்கனூர் ஊராட்சியில், வேளாண் மாணவர்கள் ஊரகப் பகுப்பாய்வு தொடர்பான ஆய்வு நிகழ்வு நடத்தினர். இதில், வேளாண் சார்ந்த முன்னுரிமை தரவரிசை அமைத்தல், கிராமத்தின் வேளாண் தொடர்பான சவால்கள், தேவைகள் மற்றும் உள்ளூர் வளங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சொக்கனூர் கிராம விவசாயிகள் பங்கேற்றனர். இதேபோன்று, தேவணாம்பாளையம் ஊராட்சியில், விவசாயிகளிடம் பங்கேற்பு மதிப்பீடு முறை வாயிலாக கிராமத்தில் உள்ள வேளாண் சார்ந்த பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கான இடர்பாடுகள், மூல காரணங்கள் மற்றும் அதன் பின் விளைவுகள் குறித்து கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி