மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
29-Sep-2025
அன்னுார்; அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். அன்னுார், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட ஒரு வார முகாம் நடைபெற்று வருகிறது. இதில் நாகமா புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தூய்மை பணி செய்யப்பட்டது. 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' என்னும் தலைப்பில் முகாம் நடைபெறுகிறது. மேல்நிலைப் பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன. மன்னீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி செய்யப்பட்டது. அன்னுார் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி நடந்தது.புகையிலையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. ஸ்பின்னிங் மில் செயல்படும் விதம் குறித்து நேரடியாக கண்டறிந்தனர். தீயணைப்பு நிலையம், அன்னுார் காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். முகாமில் என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் சங்கர் பேசுகையில் என்.எஸ்.எஸ்., முகாம் மாணவர்களுக்கு சமுதாயத்தின் மீது அக்கறை ஏற்படுத்தும். பிறருக்கு உதவும் எண்ணம் உருவாகும், என்றார். பள்ளி தலைமையாசிரியர் சிவசக்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கார்த்திகேயன், திட்ட அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாம் இன்று (2ம் தேதி) நிறைவு பெறுகிறது.
29-Sep-2025