மேலும் செய்திகள்
ஜெய் ஸ்ரீராம் அகாடமி நுாறு சதவீதம் தேர்ச்சி
22-May-2025
பொள்ளாச்சி : மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், பொள்ளாச்சி ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதன்படி, மாணவி தர்ஷினி, 75 மீ., மற்றும் 50 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார். தவிர, போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டார். மாணவி கனிஷாஸ்ரீ, நீளம் தாண்டுதலில் முதலிடமும், 50 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம் பிடித்தார்.மாணவி தன்வி நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம்; மாணவர் ஆர்யா, குண்டு எறிதலில் இரண்டாமிடம் பிடித்தனர். பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களை, பள்ளித் தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி, பள்ளி முதல்வர் அரசுபெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
22-May-2025