உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கற்றல், கற்பித்தல் போட்டி மாணவர்கள் அபாரம்

கற்றல், கற்பித்தல் போட்டி மாணவர்கள் அபாரம்

சூலுார்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கற்றல், கற்பித்தல் போட்டிகள் அக்கநாயக்கன் பாளையத்தில் நடந்தது.சுல்தான்பேட்டை வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற 'கலையோடு விளையாடு' எனும் கற்றல், கற்பித்தல் முறைகளை ஊக்குவிக்கும் போட்டிகள், அக்கநாயக்கன்பாளையம் கமலாலயம் பள்ளி வளாகத்தில் நடந்தது.ஒன்றியத்தில் உள்ள, 12 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். குழுவாக இணைந்து செயல்படும் முறை, பாடங்களை எளிதாக புரிந்து கொண்டு ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் வகையில் போட்டிகள் அமைந்திருந்தன.கல்வி திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் புதுமையான கற்பித்தல் முறைகளை பயன்படுத்த ஊக்கமளிக்கும் வகையில், பல்வேறு கலை சார்ந்த போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். முடிவில் வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ், ரவிசந்திரன், அரசு ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.மாநில திட்ட அலுவலர் பரத்ராம், செல்வகணேஷ்,கார்த்திக் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !