நேரு ஒலிம்பியாட்டில் அசத்திய மாணவர்கள்
கோவை: திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் சார்பில், நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையே கல்வியில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில், 'ஒலிம்பியாட் 2025' போட்டி நடத்தப்பட்டது. நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் தலைமை வகித்தார். கோவை விமானப்படைப் பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 56 பள்ளிகளைச் சேர்ந்த, 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார். நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நாகராஜா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.