மேலும் செய்திகள்
குறுமைய விளையாட்டுஎஸ்.வி.ஜி.வி. பள்ளி சாதனை
23-Aug-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மேற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டியில், சிவாலிக் பள்ளி மாணவ, மாணவியர் அதிக இடங்களில் வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். கைப்பந்து போட்டி, மாணவியர் 14 மற்றும் 19 பிரிவில் முதலிடம். மாணவர் 17 வயது பிரிவில் முதலிடம். மாணவர் 14 மற்றும் 19 வயது பிரிவில் இரண்டாமிடம் வென்றனர். ஹாக்கியில், மாணவர் 17 வயது பிரிவு, கபடியில் மாணவியர், 17 வயது பிரிவில் முதலிடம். 14 வயது பிரிவில் இரண்டாமிடம். சிலம்பம், மாணவியர், 19 வயது பிரிவில் சுபத்ரா, அஞ்சலி அணி முதலிடம்; 17 வயது பிரிவில் பிரகாஷினி, யஸ்வந்த் கிருஷ்ணா அணி இரண்டாமிடம்; மாணவர் பிரிவில் யஸ்வந்த் மூன்றாமிடம் பிடித்தார். மேலும், 17 வயது பிரிவில் அனுஸ்ரீ, விஜய் அணி இரண்டாமிடம், தருணிமா மூன்றாமிடம்; 14 வயது பிரிவில், லக் ஷ்னா இரண்டாமிடம் வென்றார். தடகளத்தில், மாணவியர் 19 வயது பிரிவில், பிரகாஷினி, மும்முறை தாண்டுதல் முதலிடம், 400 மீ., தடை தாண்டுதலில் இரண்டாமிடம் பிடித்தார். லக் ஷனா மும்முறை தாண்டுதலில் மூன்றாமிடம் பிடித்தார். மாணவர் 17 வயது பிரிவில், சுகந்தன், 3000 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தார். இவர்களை, பள்ளி தாளாளர் செல்வநாயகம், இணை தாளாளர் ஸ்ரீராமு, முதல்வர் விக்னேஸ்வர பிரபு, துணை முதல்வர் அமுதராணி, உடற்கல்வி ஆசிரியர் ராமன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
23-Aug-2025