உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியரசு தின தடகள போட்டி துடிப்புடன் மாணவர்கள் களம்

குடியரசு தின தடகள போட்டி துடிப்புடன் மாணவர்கள் களம்

கோவை - நேரு ஸ்டேடியத்தில் நடந்த குடியரசு தின தடகள போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் துடிப்புடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு தின தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் இரு நாட்கள் நடந்தது. சொக்கம்புதுார் எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி நடத்திய இப்போட்டியில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் என, 2,000 பேர் பங்கேற்றனர்.இதில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் நீளம் தாண்டுதல் பிரிவில், மணிசா, நேத்ரா, வாணி ஆகியோரும், உயரம் தாண்டுல், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தேவதர்ஷன், அபினேஷ் குமார், குரு பிரசாத் ஆகியோரும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான, 400 மீ., தொடர் ஓட்டத்தில் தர்சன், கார்த்திகேயன், ஜூகில் கிருஷ்ணா மற்றும் குழுவினரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மும்முனை தாண்டுதல், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அப்சரா, தக்ஷினியா, ஜெனிபர் கேத்ரியா ஆகியோரும், 17 வயதுக்குட்பட்ட நீளம் தாண்டுல் ஆண்கள் பிரிவில் சக்திவேல், மொகமது இப்ரான், பிரகின் குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மேலும், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, 800 மீ., ஓட்டத்தில், ஹன்சினி, மோனிகா, தர்சினி ஆகியோரும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மும்முனை தாண்டுதல் போட்டியில் பிரதீப், கவின் ஜோ, கதம்பீஸ்வரர் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் சஞ்சிதா, இனியா ஸ்ரீ, பிரதிக்ஷா ஆகியோரும், ஆண்களுக்கான ஓட்டத்தில் நெயில் சாம்ராஜ், ஈவன் அபிசய், மரியா எபினேஷ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து, நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை