உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் பட்டம் படிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வம்

 தினமலர் பட்டம் படிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நகரவை நடுநிலைப் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இணைப்பை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் படித்தனர். மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடை பகுதியில் வள்ளுவர் நகரவை நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இணைப்பை, இப்பள்ளியில் வாங்கி வருகின்றனர். இந்த இணைப்பை ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய நான்கு வகுப்பு மாணவர்கள், சுழற்சி முறையில் படித்து வருகின்றனர். இக்கல்வி ஆண்டு துவங்கி ஒரு மாதம் ஆன நிலையில், மாணவர்கள் பட்டம் இணைப்பை, ஆர்வமுடன் படிக்கின்றனர். அதில் உள்ள முக்கிய தகவல்களை குறித்து வைக்கின்றனர். இத்தகவலை இப்பள்ளி தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் தெரி வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி